கோவை, உக்கடம் பகுதியில் திங்கள் அதிகாலை மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாடசாமி (25) என்ற வாலிபர் உயிரிழந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மாடசாமி, நண்பர்களுடன் வெள்ளிங்கிரி கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.