கோவை: வேன் மோதி வாலிபர் பலி

கோவை பீளமேடு அருகே தொட்டிபாளையம் பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ராகுல் குமார் (22) மீது எதிரே வந்த வேன் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார், வேன் ஓட்டிய சரவணகுமார் (29) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி