கோவை: ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே ரெயில் பாதையை கடக்க முயன்ற வாலிபர், கோவை நோக்கி வந்த மெமு ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். துடியலூர் - வடகோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த துயர சம்பவம் நேற்று நிகழ்ந்தது. உயிரிழந்தவர் கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த வடிவேல் என அடையாளம் காணப்பட்டார். அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி