கோவை ஆனைக்கட்டி மலைப்பகுதியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி இளம் பெண் தொழிலதிபர் உமா மகேஸ்வரி இன்று அசைவ அன்னதானம் வழங்கினார். பழங்குடிகள் வாழும் கிராமங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வழிப்போக்கர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. பசியற்ற சமுதாயம் உருவாக்குவதே நோக்கம் என அவர் தெரிவித்தார்.