கோவை அருகே குரும்பபாளையத்தில் இன்று புளியமரத்தில் காய் பறிக்க முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பத் (30) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி காய் அடித்தபோது, மின் கம்பியில் தவறுதலாக பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கோவில்பாளையம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.