கோவை: கட்டையால் அடித்து தொழிலாளி கொலை: ஆயுள் தண்டனை

கோவை அருகே தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த வழக்கில், கோவிந்தராஜ், அவரது மனைவி தாமரைக்கு கோவை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2023ஆம் ஆண்டு அரசூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி, அண்டை வீட்டாரான கோவிந்தராஜ் வீட்டில் ஏற்பட்ட தகராறில் மரக்கட்டையால் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணை முடிவில் குற்றம் நிரூபணமானதால், நீதிபதி சிவக்குமார் இந்த தீர்ப்பை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி