அக்கூட்டத்தில், அடுத்த தேர்தல் வரை கழகத்துக்கான பணிகள் மற்றும் இயக்கத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் வெளியிடப்படும். பெங்களூரு ஐபிஎல் விழாவில் உயிரிழந்தோர் குறித்து, மிகவும் வேதனையான சம்பவம். அரசு முன்கூட்டியே உளவுத்துறை மூலம் கூட்ட நெரிசலை கணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. உயிரிழந்தவர்களுக்கு வீர வணக்கம் தெரிவிக்கிறேன், என்றார்.
தமிழ்-கன்னட மொழி விவகாரத்தில் கமலஹாசன் கருத்து குறித்து, உலகின் மூத்த மொழி தமிழ் என்பதை மொழியியல் வல்லுநர்களும், பன்னாட்டு ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன. தமிழ் மொழி தான் மற்ற பல மொழிகளுக்கு மூலமாக விளங்குகிறது. கமலஹாசன் சொன்னது தவறு அல்ல. ஆனால் கர்நாடகாவில் சிலர் இச்செய்தியை அரசியல் பாகுபாட்டுக்கு பயன்படுத்த நினைக்கின்றனர், கர்நாடகாவில் வன்முறை அரசியல் நடக்கிறது என்றார்.