கோவை: மருதமலையில் வைகாசி விசாகம் விழா; வாகனங்களுக்கு தடை

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூன் 9-ம் தேதி வைகாசி விசாகம் விழா நடைபெற உள்ளது. பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் வருவது எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் நெரிசலை தவிர்க்கும் வகையில் அந்த நாளில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலின் ஏற்பாட்டின்படி பஸ் வசதியிலும் மலைப் படிகள் வழியாகவும் சென்று தரிசனம் செய்யலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி