கோவை: விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்டதும் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று இரவு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த அஞ்சலி நிகழ்வு கோவை அவிநாசி சாலை பீளமேடு நகர குழு அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. அஜய்குமார், கே. மனோகரன், தீக்கதிர் பொது மேலாளர் எஸ். ஏ. மாணிக்கம், மாவட்ட குழு உறுப்பினர் பாண்டியன், நகர குழு செயலாளர் ஏ. மேகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி