தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இருநாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வரும் ஜூன் 17 மற்றும் 18 தேதிகளில் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. பயிற்சியில் கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்ற சிறுதானியங்களைப் பயன்படுத்தி பாரம்பரிய உணவுகள், பிழிதல் பொருட்கள், பேக்கரி வகைகள் மற்றும் உடனடி தயார் நிலை உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி விரிவாகக் கற்பிக்கப்பட உள்ளது. விவசாயிகள், சிறு அளவிலான தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தலில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். பதிவிற்கும் மேலும் தகவல்களுக்கும், 94885 18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் பல்கலை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.