கோவை: சூறாவளி மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்

தொண்டாமுத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைகள் சூறாவளிக் காற்றில் சாய்ந்ததால் விவசாயிகளுக்குப் பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. இது குறித்துப் பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பெரியசாமி, கனமழை காரணமாக சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெருந்தொகை நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று இன்று கோரிக்கை விடுத்தார். திடீர் கனமழையும் சூறாவளிக் காற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள நிலையில், அரசு சார்பில் விரைவான நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்தி