கோவையில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் தலைமையில் அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ஜி. கே. வாசன், தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகி விட்டதாகவும், எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார். போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் டாஸ்மாக் கடைகளே இத்தகைய குற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன என்றார். அரசு மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.