கோவை: தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான சிறப்பு முகாம்

தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலத்தைக் குறைக்கும் நோக்கில், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஒரு சிறப்பு முகாமை அறிவித்துள்ளது. கோவையில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) ஜூன் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று செயல்படும் என்று கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார். 

இந்த சிறப்பு முகாமில் தட்கல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், முன்பதிவுகளை ஆன்லைனில் மேற்கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான இணையதள முகவரி https://www.passportindia.gov.in என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.தட்கல் பாஸ்போர்ட் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி