கோவை: தந்தையின் மீது கொலை வழக்கு; மகன் உயிரிழந்த சோகம்

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகன் விக்னேஷ் குமார் (28), தந்தை செல்லத்துரை (55) உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விக்னேஷ் குமார் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக மதுக்கரை போலீசார் தந்தை செல்லத்துரை மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி