10-ஆம் வகுப்பு தேர்வில் கோவை பள்ளி மாநில சாதனை

கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவி அலகு மீனாள் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடத்தைப் பிடித்தார். யேஷ்வந்த் 497 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், ரவிவர்மன் 496 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்றனர். 222 மாணவர்கள் தேர்வு எழுதியதில் பலர் 490-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் பல மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்றவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி