கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகள் விடுதி சமையல் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விடுதியில் தங்கியுள்ள நிலையில் வேகவைக்காத உணவு, புழு, பூச்சிகள் கலந்த உணவு வழங்கப்பட்டதாக மாணவர்கள் புகார் செய்திருந்தனர். கல்லூரி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.