கோவை செல்வபுரம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது சிறுவயதில் பாடம் எடுத்த ஆசிரியை நாகம்மாளை திடீரென சந்தித்தார். அவரைக் கண்டதும் பரப்புரை வாகனத்திலிருந்து இறங்கி, ஆசி பெற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த உணர்ச்சிகரமான நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.