கோவை: ரூ. 60 லட்சம் நில மோசடி; ரியல் எஸ்டேட் அதிபர் கைது

கோவையில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள நிலம் தொடர்பான மோசடி வழக்கில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் டேனியல் (57) கைது செய்யப்பட்டுள்ளார். சுந்தராபுரத்தைச் சேர்ந்த மரகதம் (72) கடந்த 1998-ம் ஆண்டு அரிசிபாளையம் பகுதியில் 8 சென்ட் நிலத்தை வாங்கியிருந்தார். ஆனால், சமீபத்தில் அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் இருப்பதை கவனித்து, போலீசில் புகார் அளித்திருந்தார். விசாரணையில், கார்த்திகேயன் உள்பட சிலர் போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை மற்றொருவருக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து, கார்த்திகேயன் மற்றும் தற்போது திருப்பூரில் பதுங்கி இருந்த டேனியல் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி