கோவையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் சார்பில் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தை கண்டித்து SFI, DYFI, AIYF, AISF அமைப்புகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.