1967-ல் ஒரு படி அரிசி, மூன்று படி லட்சியம் என பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. மக்கள் திமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. 2021-ல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். தற்போது, பக்கத்து மாநில முதல்வர்களை வரவழைத்து, தொகுதி மறுவரையறை என்ற பொய்யான விஷயத்தை சொல்லி மக்களை திசை திருப்புகின்றனர்.
தமிழக மக்கள், 1967-ல் ஏமாந்தது போல் மீண்டும் ஏமாறக் கூடாது. திமுக, ஆயிரம் கோடி ஊழல், மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை போன்ற விஷயங்களை மறைக்க முயற்சிக்கிறது. திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, சுரண்டல் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும், செங்கோல் ஆட்சி தமிழகத்திற்கு வர வேண்டும் என கூறினார்.