கோவை: ஆன்லைன் முதலீட்டு மோசடி.. ரூ.5 கோடி பறிப்பு

கோவை நகரில் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி, கடந்த ஒரு வாரத்தில் 16 பேரிடம் ரூ. 5 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளது. பங்கு வர்த்தகம் மற்றும் பகுதிநேர வேலை பெயரில் பணம் பெற்றுக்கொண்டு, பின்னர் தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் இன்று அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி