கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே புதன்கிழமை நடந்த வாகனத் தணிக்கையின்போது, விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்ட சரக்கு ஆட்டோ ஓட்டுநர் ஆன்லைனில் கட்ட அனுமதி கேட்டார். ஆனால், போக்குவரத்து காவலர் தங்களிடம் உள்ள மெஷினில் மட்டுமே கட்ட வேண்டும் என வற்புறுத்தியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், குடும்பத்துடன் வந்த ஓட்டுநரிடம் மரியாதையற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.