கோவை: அதிமுக திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்த அமைச்சர்

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகம் அம்மா பேரவையின் சார்பில் குனியமுத்தூர் பகுதியில் இன்று திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வு முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

திண்ணைப் பிரச்சாரத்தின்போது எஸ்.பி.வேலுமணி கடைகள், தொழில்கள், வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று மக்களிடம் பேசினார். அதிமுக அரசு செய்த மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், தற்போதைய அரசின் செயலிழப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார். மேலும், நிகழ்வில் திரைப்பட நடிகர் வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி