அதே நேரத்தில், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவியையும் குழந்தையையும் போலீசார் பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளனர். முருகப்பெருமானுக்கு சேவை செய்யும் கோவை மக்களுக்கு விபூதிகூட வழங்கப்படவில்லை என்றும், அறிவிக்கப்பட்ட 750 சிறப்பு தரிசன பாஸ்களும் திமுகவினருக்கே வழங்கப்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மருதமலையின் முருகனை திமுகவினர் அவமானப்படுத்தியிருக்கிறார்கள். கும்பாபிஷேகம் எப்படி நடத்தப்பட வேண்டுமோ, அந்த முறையின்படி நடைபெறவில்லை. அறநிலையத்துறை அமைச்சரின் மனைவியும் மகனும் கோயம்புத்தூருக்கு சுற்றுலா வந்துவிட்டு, மருதமலை முருகனை எட்டிப் பார்த்ததைப் போல் வந்து சென்றுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி
கோவை: போதை மாத்திரை, கஞ்சா விற்றவர் கைது!