கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் இன்று சோதனை நடத்தினர். அப்போது பேக்கரி அருகே நின்று புகையிலை பொருட்கள் விற்ற தேவகோட்டை சேர்ந்த அர்ஜுனன் (47) என்பவர் பிடிபட்டார். அவரிடமிருந்து 20 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது.