ஏப்ரல் 4-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜை, காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து மூலவருக்கு திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி, காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி கோபுர விமானம், ஆதி மூலவர் கோபுர விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், காலை 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது
திருமண விருந்தில் பேதி மருந்து.. ஆற்றங்கரைக்கு ஓடிய விருந்தினர்கள்