கோவை: முளைப்பாரி ஊர்வலத்துடன் கும்பாபிஷேக விழா!

கோவை, சூலூர் அருகே முத்து கவுண்டன்புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் கருப்பராய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று முளைப்பாரி ஊர்வலம் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெற்றது. அங்காளம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளம், ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். கருப்பராய சுவாமி, கன்னிமார் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி