கோவை: ஜோனிதா காந்தி இசை நிகழ்ச்சி கோலாகலம்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான கலைத்திருவிழாவில் பின்னணி பாடகி ஜோனிதா காந்தியின் இசை நிகழ்ச்சி மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஏ. ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் பாடல்களுடன், 90-களின் நினைவுகளைத் தூண்டும் 'வசீகரா' பாடலையும் பாடினார். மாணவர்கள் கைப்பேசி விளக்குகளை ஒளிரவிட்டு அவருடன் இணைந்து பாடியது அரங்கத்தை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அனிருத் மற்றும் விஜய் படப் பாடல்களுக்கும் ஜோனிதா உற்சாகமாக ஆடி, மாணவர்களுடன் இணைந்து பாடி விழாவை மேலும் சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி