கோவை: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 12.85 லட்சம் வழங்க உத்தரவு

கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்த கொண்டசாமி நாயுடு மருத்துவ செலவுக்காக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. 12.85 லட்சம் காப்பீட்டுத் தொகை கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக 3 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் தொகையை வழங்க மறுத்ததால், நுகர்வோர் கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய நீதிபதி தட்சிணாமூர்த்தி மற்றும் உறுப்பினர் சுகுணா, இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவச் செலவுக்கான ரூ. 12,84,986 வழங்கி, மனஉளைச்சலுக்கு ரூ. 50,000 மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ. 20,000 வழங்க உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி