கோவை: பட்டமளிப்பு விழா - பட்டங்களை வழங்கிய ஆளுநர்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்றார். 

விழாவில், தமிழக ஆளுநரும் மற்றும் வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி பங்கேற்று தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 4,434 மாணவர்கள் இளநிலை, முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர். இதில், கல்லூரிகளில் இருந்து 1,536 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 2,898 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களை பெற்றனர்.

தொடர்புடைய செய்தி