கோவை: பொறியாளர் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த மணியக்காரன்பாளையம் பாரத் நகரைச் சேர்ந்த சுரேஷ் (44) என்ற பொறியாளரின் வீட்டில் நேற்று மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அந்த நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் ₹20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி