கோவை அவிநாசி சாலை தொட்டிபாளையம் பிரிவு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் 4.5 அடி நீளமுள்ள அதீத நச்சுத்தன்மை வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பிடி வீரர் கௌதம், ஆக்ரோஷமாக இருந்த பாம்பை லாவகமாகப் பிடித்து நேற்று பாதுகாப்பாக மீட்டார். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. கோடைக்காலம் மற்றும் திடீர் மழையால் பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.