கோவை வி. எச். ரோடு போலீசார் சி. எம். சி. காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் சதீஷ் (25) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ 100 கிராம் கஞ்சா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்து ஜீப்பில் ஏற்றும்போது சதீஷ் தப்பியோட முயன்றார். போலீசார் விரட்டியதில் கீழே விழுந்த அவர், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.