கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரகாஷ் (35) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவின்படி அவர்மீது குண்டர் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தாலோ அல்லது பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.