சுந்தராபுரத்தைச் சேர்ந்த மரகதம், தனது இரண்டாவது கணவர் சண்முகத்துடன் 1998ல் வாங்கிய 8. 5 சென்ட் நிலம், போலி ஆவணங்கள் மூலம் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும், தொடர்புடைய மூவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.