கோவை: யானை தாக்கி உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி

கோவை மாவட்டம் விராலியூரில் யானை தாக்கி உயிரிழந்த ரத்னா மற்றும் செல்வி ஆகியோரின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கினார்.

மலை அடிவாரப் பகுதிகளில் யானை தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும் அவர் மாவட்ட நிர்வாகத்தையும் வனத்துறையையும் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் செல்வதுரை, விஜயகுமார், ராமமூர்த்தி, சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி