இதற்காக அவரது வீட்டை முற்றுகையிட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கோவை சூலூர், சோமனூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி உறுப்பினர்கள் பங்கேற்றனர். மத்திய அரசு பாமாயில் இறக்குமதியை 10% குறைத்தது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி, தேங்காய் எண்ணெயை ஊக்குவிக்க வேண்டும் என்றார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது, டாக்டர் கிருஷ்ணசாமியின் அறிக்கையை கண்டித்த விவசாயிகள், கள் குடித்து யாராவது இறந்ததைக் காட்டுங்கள் எனக் கேள்வி எழுப்பினர். அறிக்கையைத் திரும்பப் பெறாவிட்டால் வீடு முற்றுகையிடப்படும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் எச்சரிக்கை விடுத்தார்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்