கோவை: பொறியியல் மாணவர்கள் நாசாவில் சாதனை; அண்ணாமலை பெருமிதம்

கோயம்புத்தூர் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற பார்க் கல்வி குழுமத் தலைவர் டாக்டர் பி. வி. ரவியின் 80வது பிறந்தநாள் விழாவில் பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று (ஜூன் 14) கலந்து கொண்டு பேசினார். 

ஆயிரம் பிறை கண்ட அகவை நிறைவு எனப் பெயரிடப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆன்மீக, கல்வி, அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் கோவையில் கல்வி பெறும் பொறியியல் மாணவர்கள், நாசா போன்ற உலகளாவிய நிறுவனங்களில் அதிக அளவில் பணியாற்றுவதால் பெருமிதம் ஏற்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார். கல்வித் துறையில் கோவை முக்கிய மாவட்டமாக திகழ்கின்றது என்றும் அவர் பெருமிதம் கூறினார்.

தொடர்புடைய செய்தி