கோவை: சோமனூரில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சோமனூர் பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் கேங்மேன் பணியாளர்களுக்கு எதிராக விரோதமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (CITU) சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசூர் மற்றும் வடக்கு சோமனூர் உப கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் தொடர்ந்து பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தொழிற்சங்கம் தெரிவித்தது. சோமனூர் பவர் ஹவுஸ் முன்பு திரண்ட மின் ஊழியர்கள் முழக்கங்கள் எழுப்பி, தொழிலாளர் உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிடாவிட்டால் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்தி