கோவை: முதியவர் கொலை, வாலிபர் கைது

கோவை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடம் அருகே சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 65 வயது முதியவர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (32) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். பணத்தை பறிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்தது என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி