இதனால் குடிநீர் சாலையில் வீணாக வழிந்தோடுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நேற்று கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் யாரும் வந்து எட்டிக் கூட பார்க்கவில்லை. சாலையில் தண்ணீர் வீணாவது மட்டுமல்லாமல், வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விஷயத்தில் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். கோடை காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.