கோவை: நகை ஏமாற்றம்.. கல்லூரி மாணவி தற்கொலை

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிணி (20), கோவையில் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். உணவு டெலிவரி ஊழியருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. பணம் தேவை என்று கூறி காதலன் ஹரிணியிடம் இருந்து 1½ பவுன் நகையை வாங்கிச் சென்றதாகவும், ஆனால் திருப்பித் தராததால் விரக்தியடைந்த ஹரிணி, விடுதி அறையில் வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி