சூலூர்: சிறுமி கொலை வழக்கு.. டிஜிபி ஆய்வு

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கண்ணம்பாளையம் குளம் பகுதியில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அங்கு தடயங்கள் மற்றும் விசாரணை முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சூலூர் காவல் நிலையத்தில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படைகளுக்கு முக்கிய உத்தரவுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி