கோவை: கல்லூரி மாணவி தற்கொலை

கோவை ஓணாபாளையம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மகள் மாலதி (18). கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பெற்றோர் கல்லூரிக்கு செல்லக்கூடாது எனவும் அவரிடம் இருந்த செல்போனையும் வாங்கிக் கொண்டு அவர்கள் பேசுவதை தடுத்துள்ளனர். 

இதனால் அருகில் இருந்த கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுள்ளார், அதனால் தனக்கு தொலைபேசியை தரும்படி பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். பெற்றோர்கள் தர மறுத்ததால் மனம் நொந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி