கோவை: மதுக்கரையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர்

மதுக்கரையில் நடைபெற்ற உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட நிகழ்ச்சியில் நேற்று மாவட்ட கலெக்டர் பவன்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சிக்காக அந்த ஊரில் தங்கி இருந்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். குரும்பபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேரில் ஆய்வு செய்த அவர், மாணவ-மாணவிகளுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடி, அவர்களுடன் காலை உணவு உண்டார். பின்னர், வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி