கோவை பீளமேட்டை சேர்ந்த கோவிந்தராஜ், ரூ. 32,000க்கு வாங்கிய வீடு சுத்தம் செய்யும் கருவி வேலை செய்யாததால் நுகர்வோர் கோர்ட்டில் புகார் செய்தார். முறையான பதிலளிக்காத விற்பனை நிறுவனம் மற்றும் உற்பத்தியாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதை நேற்று விசாரித்த கோவை நுகர்வோர் கோர்ட், மன உளைச்சலுக்காக ரூ. 10,000 மற்றும் வழக்கு செலவுக்கு ரூ. 5,000 வழங்க உத்தரவிட்டது.