கோவை செம்மொழி பூங்கா 110 ஏக்கர் விரிவாக்கம்!

கோவை மாநகரில் உள்ள செம்மொழி பூங்காவை மேலும் 110 ஏக்கர் பரப்பளவில் ரூ. 450 கோடி செலவில் விரிவாக்கம் செய்வதற்கான மாஸ்டர் பிளான் தயாராகியுள்ளது. மத்திய சிறைச்சாலை இடமாற்றத்திற்குப் பிறகு கிடைக்கும் நிலத்தில், தீம் பார்க், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், பொருட்காட்சி திடல் போன்ற உலகத் தரத்திலான வசதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் ஆலோசனை நிறுவனம் தயாரித்த அறிக்கை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி