கோவை: நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள் பயிற்சி மைய அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் கோவை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், இது புரளி என தெரியவந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி