கோவை: பெண்களின் தற்காப்புக்காக பெப்பர் ஸ்பிரே வழங்கிய பாஜக

பா. ஜ. க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் 41வது பிறந்த நாளையொட்டி, கோவையில் பா. ஜ. க மகிளா அணி நிர்வாகி கவுசல்யா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பெண்களின் தற்காப்புக்காக நேற்று பெப்பர் ஸ்பிரே வழங்கினார். 

அண்ணாமலை கடந்த காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் முயற்சிகளை முன்னெடுத்ததாகவும், சென்னையில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் தனது எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தியதாகவும் கூறி, அவரது பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக தான் கருதி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி