கோவை: ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்

கோயம்புத்தூர், சிவானந்தா காலனியைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மணி, தனது சகோதரர் நடராஜன் மற்றும் அவரது மகள் ரஞ்சனி ஆகியோரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணி தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயாரைப் பார்ப்பதற்காக, மணியகாரன்பாளையம் இளங்கோவன் நகரில் உள்ள தனது சகோதரர் நடராஜன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மணிக்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நடராஜனும் அவரது மகள் ரஞ்சனியும் சேர்ந்து மணியைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணி அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் நேற்று நடராஜன் மற்றும் ரஞ்சனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி